பிரச்னை இல்லை
UPDATED : ஆக 08, 2025 | ADDED : ஆக 08, 2025
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. அவருக்கு காது கேட்காது. அவர் நினைத்திருந்தால் காது கேட்கும் மெஷினை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. 'நீங்கள் தான் விஞ்ஞானி ஆச்சே... காது கேட்கும் கருவியை கண்டுபிடிக்கலாமே' எனக் கேட்டார் ஒரு நபர். அதற்கு அவர் ''என்னிடம் பேசுவோரின் வாய் அசைவை வைத்தே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என புரிந்து கொள்வேன். அதனால் எனக்கு பிரச்னை இல்லை'' என்றார் எடிசன். காது கேட்காத நிலையிலும் அயராது பாடுபட்டு சிறந்த விஞ்ஞானியாக திகழ்கிறாரே என வியந்தார் அந்த நபர்.