நன்றி
UPDATED : ஜூலை 04, 2024 | ADDED : ஜூலை 04, 2024
நன்றி என்றால் என்ன என பாட்டியிடம் கேட்டாள் மரியாள். திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலையை வாயில் குதப்பிக் கொண்டிருந்தாள் பாட்டி. அருகில் ஒரு பள்ளத்தில் இருந்த நீரை பருகியது சேவல் ஒன்று. அதைக் காண்பித்து ''மழை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் விதமாக வானத்தை பார்த்து சேவல் தண்ணீர் குடிக்கிறதே... இது தான் நன்றி'' என்றாள்.எந்த செயலானாலும் அதற்கு உரியவருக்கு நன்றி செலுத்துங்கள்.