உள்ளூர் செய்திகள்

குளிர்த்தண்டலை வாசா.. நீலமேகா.. பச்சைவண்ணா!

காவிரி நதி பாய்ந்து நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாக இருந்த பகுதிதான் சோழதேசம். அதில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த ஊர்தான் குளிர் தண்டலை. இதுவே கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை. இங்கு 'பச்ைசப்பெருமாள்' என அழைக்கப்படும் நீலமேகப்பெருமாள் கோயில் கொண்டுள்ளார். சுவாமியை 'பச்ைசப் பெருமாள்' என அழைப்பதற்கு காரணம், அருகே உள்ள பச்சமலையில் இருந்து கொண்டு வந்த கல்லினால் செய்யப்பட்டவர். இதனால் அங்குள்ளவர்களும் இவரை குலதெய்வமாக ஏற்று முடிஇறக்குதல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நீலமேகப்பெருமாளின் திருமேனி சாளக்கிராம சிலையோ என ஆச்சர்யப்படும் வகையில் பளபளப்பாக பட்டாடை அணிந்து, இதயத்தில் ஸ்ரீவத்ஸம் என்னும் சின்னத்தை கொண்டு திகழ்கிறார். சக்கரம், சங்கு, வரத, அபய என நான்கு கைகளுடன் ஜொலிக்கும் ரத்ன கிரீட கெளஸ்துபமணிகளுடன், தாமரைக்கண்ணனாய் புன்முறுவலுடன் இருக்கும் இவரை பார்ப்பது நமக்குள் நிம்மதியைத் தரும். அருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை தரிசிக்கும்போது மகிழ்ச்சியும் வந்துவிடும். பின் அந்த நீலமேகப்பெருமாளை பிராத்தித்து 'குளிர்த்தண்டலை வாசா.. நீலமேகா.. பச்ைசவண்ணா.. கோவிந்தா...' என சொன்னாலே வேண்டுதல் யாவும் நிறைவேறும். பின் சன்னதியை வலம்வரும்போது கமலநாயகி தாயார், ஆண்டாள் நாச்சியார், ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வாரை தனித்தனி சன்னதிகளில் காணலாம். வீரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகச் சோழன், நங்கை கொற்றி அரசி, உத்தர மேரூர் அனந்தாழ்வான் போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இப்படி பலராலும் திருப்பணி கண்ட இக்கோயிலுக்கு பிப்.1, 2024 அன்று கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதற்கு உதவி செய்து நீலமேகப்பெருமாளின் குளிர்ந்த கருணையையும் அருளையும் பெறுங்கள். எப்படி செல்வது: கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 43 கி.மீ., விசேஷ நாள்: ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி.நேரம்: காலை 7:30 - 11:30 மணி; மாலை 5:30 - 8:30 மணி தொடர்புக்கு: 76391 52393, 99445 58249அருகிலுள்ள தலம்: கடம்பவனேஸ்வரர் கோயில் 1 கி.மீ., (நிம்மதி கிடைக்க...)நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04323 - 225 228