முன்வினைப்பாவம் தீர...
* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை தினமும் சொல்லு. முன்வினைப்பாவம் தீரும். * கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும். * பிறர் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு.* கோயில்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளை செய்.* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே. * கோயிலின் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கு. * கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது. * பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து பக்தி செலுத்து.* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். * கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார். * ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படி. உனக்கு புண்ணியம் சேரும்.* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது தீய குணம் உனக்கும் வந்துவிடும். * கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதே. * பெருமாளின் திருவடிகளை பற்றிக்கொள். உனது பாவம் கரைந்துவிடும்.வழிகாட்டுகிறார் ராமானுஜர்