அம்மனுக்கு ஆடிக்கஞ்சி
UPDATED : ஜூலை 31, 2021 | ADDED : ஜூலை 31, 2021
ஆடிக்காற்றில் கிருமிகள் பரவும். இதிலிருந்து தப்பிக்க அம்மன் கோயிலில் ஆடிக்கஞ்சி வழங்குவர். இதை தயாரிக்கும் போது சீரகம், அதிமதுரம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், கடலாடி வேர், சீற்றாமுட்டி ஆகிய நாட்டு மருந்துகளை பொடி செய்து ஒரு துணியில் முடிச்சாக கட்டி வைப்பர். அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில் மருந்து முடிச்சை 15 நிமிடம் ஊற வைப்பர். பிறகு அம்மனுக்கு படைத்து பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பர்.