உள்ளூர் செய்திகள்

பிறவியை நீக்குபவர்

அத்தேவர் தேவர் அவர்தேவர் என்று இங்ஙன்பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தேபத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்றமெய்த்தேவர் தேவர்க்கே சென்றுாதாய் கோத்தும்பீஅரசவண்டே! உலகத்தில் அந்தக் கடவுள் பெரியவர் என்றும், இந்தக் கடவுள் பெரியவர் என்றும் பல தெய்வங்களைப் புகழ்கின்றனர். அப்படிப்பட்ட மயக்கம் இல்லாமல் மெய்யான தெய்வமான சிவபெருமானைப் பற்றிக் கொண்டேன். அவரும் என் பிறவிப்பற்றை அறுத்து அருள்புரிந்தார். அவரின் திருவடியைப் புகழ்ந்து ரீங்காரம் செய்வாயாக என பாடுகிறார் மாணிக்கவாசகர்.