உள்ளூர் செய்திகள்

சுடச்சுட சந்தனம்

பக்தர்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அங்கிருந்த வெங்கடபட்டரை கண்ட கிராம அதிகாரி, 'என்னப்பா! சும்மா நின்னா எப்படி? சந்தனத்தை அரை” என அதிகார தொனியுடன் கட்டளையிட்டார். 'அக்னி சூக்தம்' என்னும் மந்திரம் ஜபித்த படி சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார் பட்டர். அதைப் பூசிய அனைவரது உடம்பும் தீப்பட்டது போல எரிந்தது. விஷயம் அறிந்த கிராம அதிகாரி, 'இது வெங்கடபட்டரின் வேலை' என்பதை உணர்ந்து கொண்டார். தெய்வீக சக்தி மிக்க அவரிடம், “உங்களின் மகத்துவம் தெரியாமல் நடந்து விட்டேன் மன்னியுங்கள்” என வேண்டினார். உடனே வருண சூக்த மந்திரம் சொல்லத் தொடங்கினார் பட்டர். சந்தனம் பூசியவர்களின் உடம்பில் குளிர்ச்சி பரவியது. பிற்காலத்தில் இந்த வெங்கடபட்டரே ' குரு ராகவேந்திரர்' என மக்களால் போற்றப்பட்டார்.