புண்ணியம் உங்களுக்கே
UPDATED : பிப் 27, 2025 | ADDED : பிப் 27, 2025
மனிதனாக பிறந்தவன் 'பஞ்ச மகாயக்ஞம்' என்னும் ஐந்து உயர்ந்த செயல்களைச் செய்ய வேண்டும். பிரம்ம யக்ஞம்: வேதத்தைக் கற்றல், மற்றவருக்கும் கற்பித்தல். பிதுர் யக்ஞம்: எள், தண்ணீரால் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து அன்னம் படைத்து வணங்குதல். பூத யக்ஞம்: பிராணிகளுக்கு உணவளித்தல்.நர யக்ஞம்: வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்தல். தேவ யக்ஞம்: தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் யாகம் செய்து வழிபடுதல்.இதில் தேவ யக்ஞத்திற்கே அதிகம் செலவாகும். மற்றவை குறைந்த செலவுடையவை. முடிந்ததை செய்தால் புண்ணியம் உங்களுக்கே.