உள்ளூர் செய்திகள்

பிடிச்சதை பாடுங்க

மனிதராக பிறந்த அனைவருக்கும் பக்தி அவசியம். நம்மை படைத்த கடவுளை நன்றியுடன் தினமும் நினைக்க வேண்டும். அப்போதுதான் மனிதப் பிறவிக்கே மகத்துவம் உண்டாகும். சரி. நாமாக எப்படி கடவுளை நினைப்பது? அவரைப் பற்றி என்ன தெரியும்? தெரியாததைப் பற்றி என்ன சிந்திக்க முடியும்? இதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் குருபக்தி. அருளாளர்கள் காட்டிய பாதையில் சென்றால் எளிதாக கடவுளின் அருளைப் பெறலாம். அதற்காக அவர்கள் பாடிய பாடல்களை பாடவோ கேட்கவோ செய்யலாம். அதிலும் புண்ணிய பூமியான நம் நாட்டில் பக்தி நுால்களுக்கு பஞ்சமில்லை. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி என ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. உங்களின் மனதிற்கு பிடித்த பாடலை தினமும் பாடுங்கள்.