கனவில் பாம்பா...
UPDATED : மே 23, 2025 | ADDED : மே 23, 2025
* சுவாமிதேசிகன் இயற்றிய கருட தண்டகம், கருட பஞ்சாஷத் துதிகளைப் படித்தால் நாகதோஷம், கனவில் பாம்புத் தொல்லை மறையும். * வைகுண்டத்தில் பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களில் கருடனே முதன்மையானவர். * பஞ்சமுக ஆஞ்சநேயரின் முகங்களில் கருட முகமும் ஒன்று. * சனிக்கிழமையன்று கருடன் சன்னதியில் விளக்கேற்றினால் விருப்பம் நிறைவேறும். * கருடனை தரிசிப்பது புண்ணியம். நல்ல சகுனத்தின் அடையாளம்.* கருடனைக் கண்டால் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என கன்னத்தில் இட்டபடி வணங்க வேண்டும். * பறவை இனத்தின் தலைவன் என்பதால் கருடனுக்கு 'பட்சிராஜன்' என்று பெயர். * வினதையின் மகன் என்ற பொருளில் 'வைநதேயன்' என்றும் கருடன் அழைக்கப்படுகிறார்.