புகழுடன் வாழ...
UPDATED : மே 23, 2025 | ADDED : மே 23, 2025
நம் எதிர்காலத்தை அறிய ஜோதிடம் வழிகாட்டுகிறது. இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என வாழ்வில் அனைத்தும் கிரகப் பெயர்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. நவக்கிரகங்கள் ஒன்பதுக்கும் நாயகனாக திகழ்பவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான இவர், மேஷ ராசிக்கு வரும் போது உச்ச பலத்தை அடைகிறார். இக்கால கட்டத்தையே 'அக்னி நட்சத்திரம்' என்கிறோம். சூரியனின் நிலையைக் கொண்டே ஒருவரின் ஆரோக்கியம், அந்தஸ்து ஆகியவற்றை அறிய முடியும். ஞாயிறன்று செந்தாமரை மலரால் சூரியனை வழிபட்டால் புகழுடன் வாழலாம்.