உள்ளூர் செய்திகள்

மவுனச்சாமி

சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதி இருக்கும். கல்லால மரத்தின் கீழ் சீடர்களுடன் தெற்கு நோக்கி அமர்ந்த இவர் சொல்லும் தத்துவம் என்ன தெரியுமா... பேசாதே... மவுனமாக இரு. 'மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு' என்கிறார் அவ்வையார். மவுனமாக இருப்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுன விரதம் இருந்தால் குருவருள் கிடைக்கும். துறவிகள் வியாழனன்று மவுன விரதம் இருப்பார்கள். மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம். உடலை சிறிதும் அசைக்காமல் கட்டை போல இருப்பது உடல் மவுனம். பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டியபடி தியானத்தில் இருப்பது இது. வாக்கு மவுனம் என்பது பேசாமல் இருப்பது. மனதாலும் அசைவற்று இருப்பது மன மவுனம். இவற்றை கடைபிடிப்பவர்கள் கடவுளோடு உறவாடும் பாக்கியம் பெறுவர்.