குடும்ப நிம்மதிக்கு...
சில நேரத்தில் நன்றாக இருக்கும் குடும்பத்தில் கூட சூறாவளியாக புயல் வீசுவதுண்டு. பிரச்னை குறுக்கிடும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி குறையாது. கணவர், மனைவி இடையே பிரச்னை நீங்கவும், ஒற்றுமை பெருகவும் பின்வரும் தேவாரப் பாடலை 12 முறை தினமும் படியுங்கள். ''மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே'' இந்த பரிகாரத்திற்கு சிவனும், பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் படம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் விளக்கையே சிவன், பார்வதியாக கருதி வழிபடுங்கள். முடிந்தால் வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளியன்று கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்மன் சன்னதியில் விளக்கேற்றுங்கள். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். அமைதிப் பூங்காவாக மாறும்.