யாதுமாகி நின்றாய்
UPDATED : செப் 19, 2025 | ADDED : செப் 19, 2025
தேவி ஆதிபராசக்தி பூவுலகம் முழுவதும் ஆட்சி செய்கிறாள். 'யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக இருப்பவள் அவளே. எனவே அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. 'சிவை' என்றால் 'சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.