சரஸ்வதியின் இருப்பிடம்
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
வெள்ளை தாமரை. வீணையின் நாதம், புலவர்களின் உள்ளம், வேதம் சொல்லும் வேதியர், தர்மத்தை உபதேசிக்கும் துறவிகள். குழந்தைகள் பேசும் மழலை மொழி, குயில் ஓசை, கிளியின் நாக்கு இவையே சரஸ்வதியின் இருப்பிடம் என்கிறார் மகாகவி பாரதியார். ஞானத்திற்கு அதிபதியான இவளை வழிபட்டால் அறிவு வளரும்.