குஷியோ குஷி
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
அக்காலத்தில் குருகுல மாணவர்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வருகிறது என்றால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே குஷியாகி விடுவர். காரணம் குருகுலத்தில் பாடம் நடத்துவதை குறைத்துக் கொண்டு, அந்த மாதம் முழுவதும் செயல்முறை கல்வியில் ஈடுபடுத்துவர். வாட்ட சாட்டமான மாணவர்களை பனைமரத்தில் ஏறச் செய்து ஓலைகளை நறுக்கச் சொல்லுதல், அதை வெயிலில் உலர்த்தி காய வைத்தல், பின் அதை பதப்படுத்தி பாடம் எழுதுவதற்கு ஏற்றாற்போல மாற்றச் செய்வர். அதைப்போல் கரையான் அரித்த சுவடிகளில் உள்ள பாடத்தை புதிய ஓலையில் எழுதச் செய்வர். மேலும் குருகுலத்தை துாய்மைபடுத்தும் விதமாக வெள்ளை அடித்தல், கோலமிடுதல் போன்ற பணிகளிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவர்.