உள்ளூர் செய்திகள்

நன்றி சொல்லும் நாள்

சரஸ்வதிபூஜை அன்று குழந்தைகள் புத்தகம், பேனா, பென்சிலுக்கும், சமையல் செய்வோர் அடுப்பு, அரிசிப்பானைக்கும், தொழில் புரிவோர் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் பூஜை செய்வர். இப்படி தொழிலுக்கு பயன்படும் கருவிகளுக்கு நன்றி சொல்லும் நாளே சரஸ்வதிபூஜை. ஏனெனில் ஒவ்வொரு தொழிலும் ஒரு கலைதானே. இதனால்தான் கலைமகளாகிய சரஸ்வதியை வணங்குகிறோம். விஜயதசமி அன்று பள்ளி, கல்லுாரிக்கு சென்று படிப்பதும், தொழில் செய்ய தொடங்குவதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.