உள்ளூர் செய்திகள்

விருந்துணவு

வடஇந்தியாவில் தீபாவளி அன்று எமதர்மன், அவனது தங்கையான யமுனைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யமுனா நதி தீபாவளியன்று அண்ணனுக்கு பரிசளிக்க வருவதாகவும், அதற்கு நன்றியாக யமுனை விருந்து படைப்பதாகவும் நம்பிக்கை. இதன் அடிப்படையில் சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசு அளிப்பர், அதற்கு நன்றிக்கடனாக, சகோதரிகள் சகோதரர்களுக்கு விருந்துணவு அளிப்பர். இரவில் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவர். தீபம் அணையாமல் நீண்டநேரம் மிதந்தால் ஆண்டு முழுதும் வளமாக வாழலாம் என நம்புகின்றனர்.