எத்தனை மணிக்கு
UPDATED : அக் 17, 2025 | ADDED : அக் 17, 2025
சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து குளிப்பது கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால் தீபாவளியன்று மட்டும் நீராடலாம் என்ற சிறப்பு விதி இருக்கிறது சூரிய உதயத்தை 'அருணோதயம்' என்பர். சூரியனின் தேரோட்டி அருணன். அவன் சிவப்பாக இருப்பான். அவனது வருகையின் அடையாளமாக, சூரியன் உதிக்கும் முன்பே வானில் அருண வர்ணம் (சிவப்புநிறம்) பரவி விடும். தீபாவளியன்று இந்த அருணோதய நேரத்தில் (அதிகாலை 5:00 - 5:30 மணி) எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. சிலர் அதிகாலை இரண்டு மணி, மூன்று மணிக்கே நீராடுவர். இதை தவிர்க்க வேண்டும்.