மலரே...
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
கோயிலில் நடக்கும் பூஜையின் போது பயன்படுத்தும் பூக்களைப் பொறுத்து பலன் கிடைக்கும். காலை, மாலை, அர்த்தஜாம பூஜையில் வெள்ளெருக்கு, வெள்ளை அரளி, பிச்சிப்பூ, நந்தியாவட்டை, மல்லிகை, முல்லை மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். உச்சிக்கால பூஜையின் போது செந்தாமரை, செவ்வரளி மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் பணம் சேரும். மற்ற வேளைகளில் கொன்றை, செண்பக மலர்களால் பூஜை செய்யும் போது அதை தரிசித்தால் செல்வம், மோட்சம் கிடைக்கும். ஆனால் வில்வம், துளசியை பூஜைக்கு நாம் கொடுத்தால் நன்மைகள் சேரும்.