உள்ளூர் செய்திகள்

குறையொன்றுமில்லை

புராண காலத்தில் நம் நாட்டை ஆட்சி செய்தவர் அம்பரீஸன். இவர் தனக்கென எதையுமே செய்ததில்லை. அஸ்வமேத யாகத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை நடத்துவதே அபூர்வம். இவரோ நுாறு முறை அஸ்வமேத யாகங்களை நடத்தி அதன் பலனை மகாவிஷ்ணுக்கு அர்ப்பணித்தார். இதில் மகிழ்ந்த மகாவிஷ்ணு தன் கையில் இருந்த சக்கரத்தை அம்பரீஸனுக்கு பரிசளித்தார். இவரை நினைத்தாலே நம் வாழ்வில் குறைவிருக்காது.