உள்ளூர் செய்திகள்

தாம்பூலப்பை

சுபநிகழ்ச்சியின் போது தாம்பூலப்பை தருவார்கள். அதில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இருக்கும். இதில் மகாலட்சுமியின் அம்சமான வெற்றிலை ஆன்மிகம் மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் தொடர்பு கொண்டது. இதை பாக்குடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதன் காம்பில் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இருப்பதால் அதைக் கிள்ளி விட்டு சாப்பிடுவது நல்லது.