தக்காளி அபிஷேகம்
UPDATED : ஜூலை 26, 2021 | ADDED : ஜூலை 26, 2021
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி அல்லது பங்குனியில் பொங்கல் விழா நடத்தப்படும். அம்மனுக்கு தக்காளி சாறால் அபிஷேகம் செய்வர். இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் அபிஷேகமும் உண்டு. அம்மனுக்கு தக்காளி கோர்த்த மாலையும் சாத்தப்படுகிறது.