உள்ளூர் செய்திகள்

எப்போதும் கடவுளுடன் இருங்கள்!

* அமைதிக்கு வழி வகுப்பவற்றை தேடிச் செல்வதுடன், பிறருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.* என் மனதில் கவலைகள் பெருகும் போது, உள்ளத்தை உமது (கர்த்தர்) ஆறுதல் மகிழ்விக்கின்றது.* பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்.* வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார்.* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.* எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.* உமது ஆடைகள் எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.- பைபிள் பொன்மொழிகள்