உள்ளூர் செய்திகள்

தூக்கத்துக்கு முக்கியத்துவம் தராதே!

* இறைவன் நம்மிடம் அன்பு கொண்டிருப்பது போல் நாமும் பிறரிடம் அன்பு கொண்டவராக இருக்க வேண்டும்.* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்து போனால், அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்கள் அன்னியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.* நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை. நீங்கள் அச்சத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.* நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாயும் இருக்க வேண்டும்.* தூங்கிக் கொண்டேயிருப்பதை நாடாதே. கண் விழித்திரு, உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.- பைபிள்