உள்ளூர் செய்திகள்

தாழ்மையுடன் நடப்போம்

* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர்.* உலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும் முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி, ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். * மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது.* பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மையே ஏய்த்துக் கொள்கின்றனர்.* களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும், ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.* நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.- பைபிள்