விழித்திரு.. உணவு கிடைக்கும்
* நடுகிறவனும் நீர்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.* தேவையுள்ளவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய்விடுவதில்லை.* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு, ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.* உறக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமை அடைவாய், கண் விழித்திரு; திருப்தியான அளவு உணவு பெறுவாய்.* கடவுளே நமக்கு அடைக்கலமும் பலமும் ஆனவர். துன்பங்களிடையே உற்ற துணையும் ஆனவர்.* எந்தக் காலத்திலும் எவரும் கடவுளைக் கண்டதில்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்தால் நம்முன் கடவுள் வசிக்கிறார்.* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.- பைபிள் பொன்மொழிகள்