பணிவு மிகவும் அவசியம்
* அடக்கமாகவும் பணிவாகவும் இரு. பணிவு ஒன்றே உன் வாழ்வை உயர்த்தும்.* ஒருவர் சிறந்த ஆசிரியரை பெற்றுவிட்டால் பிறவிக்கடலை தாண்டி விடலாம்.* ஒருவரது மனதின் பண்பை கொண்டு அவர் நல்லவரா, கெட்டவரா என முடிவு செய். * கடவுள் நமக்கு அருள்புரிவதில் நிகரற்றவன். * ஒரு செயலைச் செய்யும்போது நமக்குத் துணையாக பிறர் இருப்பது நல்லது. * யாரையும் சிறியவன் என்று ஏளனம் செய்யாதே. * இன்பமும், துன்பமும் உனது மனதில் இருந்தே தோன்றுகின்றன. * கரையான்போல் பிறர் பொருளை கெடுத்து மகிழாதே. * மரணம் எப்போது வரும் என அறிய முடியாது. எனவே அதற்குள் புண்ணியத்தை தேடு. * புண்ணியம், பாவத்தை பிறரிடம் சொல்லும்போது அது குறையும். எனவே பாவத்தை கூறினால் அதன் சுமை குறையும். * துன்பங்களை பொறுப்பவனே ஞானி. விருந்தினருக்காக வாழ்பவனே குடும்பஸ்தன். * நாக்கிற்கு ஆசைப்பட்டு சாப்பிட்டால் உடல் நலம் குறையும். * கிடைத்தது கூழாக இருந்தாலும் அதை முழு மனதுடன் ஏற்று சாப்பிடு. * பற்று, ஆசை யாரிடம் உள்ளதோ அவர் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பார். பற்று என்பது தன் பொருளை விரும்புதல். ஆசை என்பது பிறர் பொருளை விரும்புதல். அறிவுறுத்துகிறார் வாரியார்