உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சிக்கு...

* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும். * புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது. * எளிமையாக வாழ்வதே வலிமையான வாழ்வு. இதனால் நிம்மதியாக வாழலாம். * நிதி இருந்தால் நீதி, மனம் இருந்தால் மானம், தனம் இருந்தால் தானம் இருப்பது அவசியம். * மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும். * உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க வழிபாடு அவசியம். * நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். * நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் தொடாதே. * ஆடம்பரம், அலட்சியம் வேண்டாம். * எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். * நண்பர், உறவினர் கைவிடலாம். ஆனால் நீ செய்த தர்மம் கைவிடாது. * மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் சங்கிலிகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான்.வாரியார்