உள்ளூர் செய்திகள்

எண்ணம் தூய்மை ஆகட்டும்

* ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.* அனைத்து காலங்களிலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகின்றான். இதுதான் தெய்வத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும்.* கடவுளை நாம் அறிய வேண்டுமானால்  அகந்தையையும், அஞ்ஞானத்தையும் அறவே ஒழித்துவிட வேண்டும்.* வாழ்க்கை நடத்த கருத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனுடைய தளைகளைக் கொண்டு உங்களது ஆன்மாவைச் சிறைப்படுத்தி விடக்கூடாது.* எண்ணத்தில் உண்மையும், சொல்லில் நேர்மையும் மிகவும் அவசியமாகும். பொய் சொல்வது நமது இயல்பு அல்ல. அது வெளியிலிருந்தே வந்ததாகும் என்பதை உணர்ந்தால் அதை விலக்கி விட முடியும்.- அரவிந்தர்(இன்று அரவிந்தர் நினைவு தினம்)