எல்லாம் நன்மைக்கே....!
UPDATED : அக் 10, 2014 | ADDED : அக் 10, 2014
* எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதே மனப்பக்குவத்தின் அடையாளம்.* எண்ணத்தில் தூய்மை இருந்தால் உனக்கு நிச்சயமாக கடவுளின் உதவி கிடைக்கும்.* பகைச் சக்திகள் இருப்பதெல்லாம் உன் நன்மைக்காகவே. அதனால் தான் மனதில் தைரியமும், உறுதியும் வளர்கிறது.* அமைதியுடன் செயலாற்றக் கற்றுக்கொள். வெறும் வாய் வார்த்தையால் பயனேதும் விளைவதில்லை.* தெய்வத்தைச் சரணடைவதால் யாரும் குறைந்து போவதில்லை. மாறாக வளரவே செய்கிறார்கள்.- ஸ்ரீஅன்னை