உள்ளூர் செய்திகள்

குழந்தையாக மாறி விடு

* தாயைத் தேடும் குழந்தையைப் போல, கடவுளிடம் உன்னை ஒப்படைத்து விடு. ஆபத்து உன்னை நெருங்காமல் அவர் பாதுகாப்பார். * தவறான பாதையில் பிடிவாதமாகச் சென்றால், இறுதியில் கஷ்டத்தை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. * பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். தைரியசாலிக்கோ அவன் நண்பனாகத் தெரிகிறான். * இன்பமும், அமைதியும் உன்னிடமே இருக்க வேண்டும். அதை பிறரிடம் இருந்து பெறவோ, அவர்களுக்கு கொடுக்கவோ முடியாது. ஸ்ரீஅன்னை