வாய்ப்பு உன் கையில்!
UPDATED : ஜன 18, 2015 | ADDED : ஜன 18, 2015
* நேற்றைய பொழுது முடிந்து விட்டது. இனி எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்.* இன்றைய பொழுதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்துவது உன் கையில் தான் இருக்கிறது.* அன்பும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே பிறருக்கு சேவை செய்வது எளிது.* பிரச்னைகளைச் சரியாக புரிந்து கொள்ளாததே துன்பத்திற்கு காரணமாக இருக்கிறது. * மனிதர்கள் ஏமாற்றலாம். ஆனால், கடவுளை நம்புபவர்களுக்கு ஏமாற்றத்திற்கு இடமேயில்லை.- ஸ்ரீஅன்னை