உயர்வது உறுதி
UPDATED : பிப் 23, 2015 | ADDED : பிப் 23, 2015
* இருப்பதில் திருப்தி கொள். நம்பிக்கையுடன் வாழ்ந்திடு. பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.* தடைகளைக் கண்டு மலைக்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு உழைத்திடு. உயர்வு தேடி வரும்.* பயன் இல்லாமல் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஆபத்தை விளைவிக்கும்.* செய்த தவறை எண்ணி உளப்பூர்வமாக வருந்தினால், அந்த பாவம் நிச்சயம் மன்னிக்கப்பட்டு விடும்.* தொண்டு செய்வதில் ஈடுபாடு கொள். கடவுளுக்கு இதை விடச் சிறந்த வழிபாடு வேறில்லை. -ஸ்ரீ அன்னை