துன்பம் கூட வரம் தான்!

* உனக்கு துன்பம் நேருமானால் அதை இறைவனிடமிருந்து கிடைத்த வரமாகவே கருது.
* உன் கடமைகளை முனைப்புடனும், கவனத்துடனும் செய். பலனை ஆண்டவனிடம் விட்டு விடு. எப் போதும் கவலையற்றிரு.
* எப்போதும் அமைதியாகவே இரு. எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.
* கடந்ததை எண்ணி வருத்தப்படுவதிலும் பயனில்லை. வருங்காலத்தைப் பற்றிய கற்பனை யை வளர்ப்பதிலும் பயனில்லை.
* உன் எண்ணங்களில் அவநம்பிக்கை வராத வகையில் கூடிய வரையில் நடைபோடு. நம்பிக் கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள்.
* இறைவனிடம் நமக்கு தேவையானவை எல்லா விஷயங்களும் எப்போதும் இருக்கின்றன. நாம் நம்மை தகுதியுடையவர்களாக்கிக் கொண்டால் எளிதில் அவற்றைப் பெற்று வாழ முடியும்.
* எண்ணங்களில் அவநம்பிக்கை வராத வகையில் கூடிய வரையில் நடைபோடு. நம்பிக் கையுடையவர்களாக மாற்றிக் கொள். மனமகிழ்ச்சி உண்டாக இதுவே வழி.