நேருக்கு நேராகப் பார்
UPDATED : மே 31, 2015 | ADDED : மே 31, 2015
*எத்தனை எதிர்ப்பு குறுக்கிட்டாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.* கடந்த காலம் பற்றி கவலைப்படாதே. இனி எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதே முக்கியம்.* பயந்தவன் தெய்வத்திடம் கடுமையைக் காண்கிறான். நம்பிக்கை மிக்கவனோ நட்புடன் நெருங்கிப் பழகுகிறான்.* நீ முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறாய். அதற்காக இன்னும் எவ்வளவோ கற்க வேண்டியிருக்கிறது.* உன் குற்றத்தை நேருக்கு நேர் பார்க்கப் பழகிக் கொள்.* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் தான், பிறருக்கு அளிக்க முடியும்.-ஸ்ரீஅன்னை