நல்லதை மட்டுமே பார்!
UPDATED : செப் 20, 2013 | ADDED : செப் 20, 2013
* வாழ்வில் அடைய வேண்டிய மிகச் சிறந்த பொருள் கடவுள் மட்டுமே. அவன் துணையின்றி நம்மால் வாழவே முடியாது.* முயற்சியுடன் செயலைத் தொடங்கினாலும், இடையூறு வரத்தான் செய்யும். லட்சியத்தை அடைந்த பிறகே அது தகர்க்கப்படும்.* மேகத்தைக் கலைத்து சூரியன் கிளம்புகிறது. அதுபோல், இதழ் ஓரத்தில் எழும் ஒரு புன்சிரிப்பு, எவ்வளவு பெரிய சிரமத்தையும் கலைத்து விடும்.* மனிதனிடம் நேர்மை அதிகரித்து விட்டால், செய்யும் செயல் அனைத்தும் கடவுளின் செயலாகி விடும்.* செயலில் ஆர்வமும், விழிப்புணர்வும் இணைந்து விட்டால், நாம் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.* மனிதன் எப்போதும் நல்லதை மட்டுமே காண்கின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். நல்லதைக் காணுங்கள், நல்லதைச் செய்யுங்கள்.ஸ்ரீஅன்னை