உள்ளூர் செய்திகள்

பயனுள்ளதைப் பேசு

* உனக்கு சிரமம் தரும் விஷயத்தைக் கூட, புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்.* பயன் தராத ஒவ்வொரு சொல்லும் ஆபத்தை வரவழைக்கும் வம்பு பேச்சே.* எதைக் கண்டும் பயப்படாதே. 'அச்சப் படுவது மடமை' என்று உனக்கு நீயே கூறிக் கொள்.* செய்த தவறுக்காக உண்மையில் வருந்தினால், கடவுளின் மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்.* முயற்சியில் எப்படி ஈடுபடுவது என்பதை அறியா விட்டால், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகாது.* கடவுளுக்குத் தொண்டு செய்வதை விட மேலான மகிழ்ச்சி வேறில்லை.-ஸ்ரீஅன்னை