நம்பிக்கையுடன் பாடுபடு
UPDATED : டிச 21, 2014 | ADDED : டிச 21, 2014
* நிதானத்தை இழக்கும் நேரத்தில் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.* எதையும் புன்னகையுடன் காணுங்கள். அப்போது வாழ்க்கை பயனுள்ளதாகும்.* நேர்மை இல்லாவிட்டால் மனதில் மகிழ்ச்சி குறையத் தொடங்கி விடும். அப்போது உண்ணும் உணவு கூட சுவையாய் இராது.* வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எப்போதும் உழைப்பில் ஈடுபடுங்கள்.* எப்போதும் அறிவைப் பயன்படுத்துங்கள். அப்போது அது படிப்படியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.- ஸ்ரீஅன்னை