வாழ்வின் நோக்கம் என்ன?
* இறைவனுக்குச் செய்யும் இடைவிடாத நிவேதனமாக நீ உன்னுடைய வேலையைச் செய்தால் தியானமே தேவையில்லை.* தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் பிரார்த்தனை செய்து தாங்கள் கேட்டதை இறைவனிடம் இருந்து தவறாமல் பெற்றுவிடுகின்றனர்.* தன்னில் இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய தர்மத்தின்படி, சட்டத்தின்படி வாழ்தலே உண்மையான புகழ், உண்மையான வீர காவியம்.* வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக அல்லது உண்மைக்காக வாழ்தல், குறைந்தபட்சம் தனது ஆன்மாவுக்காக வாழ வேண்டும்.* எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனை அறிகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் துன்பங்கள் பறந்து போகின்றன.* இறைவனின் சொற்கள் ஆறுதலையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக்கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கும் ஒவ்வொரு திரையையும் விலக்குகின்றன.* எதற்கும் எதிலும் இறைவனைச் சார்ந்திருப்பது எவ்வாறு என்பதை நாம் அறிதல் வேண்டும். இறைவனால் மட்டுமே இடையூறுகளையெல்லாம் வெல்ல முடியும்.- ஸ்ரீஅன்னை