எது நிலையான புகழ்
* இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.* இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனத்தை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால் துன்பம் இல்லை.* அன்பை அடிப்படையாகக் கொண்டே மனித வாழ்க்கை சிறப்படைகிறது. அன்புடையவன் தன்னலமற்றவனாக வாழ்கிறான்.* அடக்கம் உடைய மனிதன் உயர்வடைகிறான். மேலும் உயர்வடைய அடக்கத்தைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.* தான தர்மங்களினால் பெற்ற புகழ் மட்டுமே நிலையானது. அதைத் தவிர இந்த உலகில் பெறும் எல்லாப்புகழுமே நிலையற்றது தான்.* எந்த சூழ்நிலையிலும் பொதுவாய் சிந்தித்து, நடுநிலைமையோடு வாழ்வதே சிறந்தது. ஒரு மனிதனின் உயர்ந்த தகுதி அது தான்.* உலகத்தின் மற்ற தொழில்கள் அனைத்தும் உழவைச் சார்ந்தே இருப்பதால், உழவுத் தொழில் தான் உலகில் சிறந்தது.- திருவள்ளுவர் (இன்று திருவள்ளுவர் தினம்)