உள்ளூர் செய்திகள்

தன்னுயிராகப் பிறரைப் போற்றுங்கள்

* கொலை செய்யாதே, களவாடாதே, கள் உண்ணாதே, பிறர்மனைவி விரும்பாதே, பொய்பேசாதே. இந்த ஐந்தையும் பின்பற்றினால் எந்த தீங்கும் நேராது.
* பாவம் செய்வது தவறு என்பதை மனிதன் உணர்கிறான். உணர்ந்தும் அதை அவன் செய்யாமல் இருக்கின்றனா என்றால் அதுதான் இல்லை. எவனொருவன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து வருந்துகிறானோ, அவன் தான் செய்த பாவத்திலிருந்து விலகி தன்னை தூய்மைப்படுத்திக் கொள்கிறான்.
* அறிவுரை கூற விரும்புபவர்கள், தன்னிடம் உள்ள குறைகளையும் போக்கிய பிறகே, பிறருக்கு போதனை செய்ய வேண்டும்.
* எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி, மறந்தும் பிறருக்கு கேடு செய்யாமல், தன்னலம் கருதாதமல், எல்லா உயிர்களையும் கருணையால் நேசிப்பவனுமே மேலான மனிதன்.
* பெண்ணின் பெருமையை உணராத மனிதர்கள் நாகரிகம் என்பதே அறியாதவர்கள். காலநிலையை உணர்ந்து பெண்களும் தர்மத்திற்கு மாறுபடாதவழியில் தங்கள் உரிமையைப் பெற முயலவேண்டும்.
* ஆன்மிக சக்தி நம் மனதில் எழுச்சி பெற அன்பு, தியாகம் போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும்.
-திரு.வி.க.,