உள்ளூர் செய்திகள்

பொறுமையாக இருங்கள்

* வாழ்க்கைத் துணையுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விட்டுக்கொடுங்கள். * மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசியுங்கள். * தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. * எளிமையாக வாழ்வது நம்பிக்கையாளரின் குணமாகும். * அநாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமம். * பெற்றோர், உறவினர்கள் என யார் தவறு செய்திருந்தாலும் நீதியின்படி நடக்கவும். * பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்ற முடியாது. * பாதை தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவதும் தர்மமே. * மக்களுக்கு சேவை செய்யாத தலைவர் சொர்க்கம் செல்ல மாட்டார். * பொய்யை உண்மை என்று கூறுவது மோசடி செயலாகும்.* ஒருவரது செல்வத்தில் யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் உரிமை உள்ளது. * இறைவழியில் பொருள்களைச் செலவழிப்போரின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றது. அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நுாறு தானிய மணிகளைக் கொண்டு உள்ளது. இவ்வாறு அவன் தன்னை நாடுவோரின் நற்செயல்களின் பலன்களை பன்மடங்காக்குகிறான். * ஷைத்தான் வறுமையைக் கொண்டு ஒருவரை அச்சுறுத்துகிறான்.