தர்மம் செய்வோம்
UPDATED : ஆக 21, 2023 | ADDED : ஆக 21, 2023
இறையச்சம் உள்ள மனிதர்கள் கீழ்க்கண்டவற்றை பின்பற்றுவார்கள். * எந்தச் சூழ்நிலையிலும் இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக பணிந்து வாழ்வர். * ஒவ்வொரு விநாடியும் அவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வு இருக்கும். * எதுவெல்லாம் தவறு, கூடாது என சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை தவிர்ப்பர். * எதையெல்லாம் செய்ய கட்டளையிட்டிருக்கிறானோ அதையெல்லாம் செய்வர். * நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை தர்மத்திற்கு செலவிடுவர்.