உள்ளூர் செய்திகள்

திருப்தி

ஆஷிக் அலி என்பவரிடம் கார் இருந்தது. ஆனால் அடுத்த வீட்டுக்காரரின் சொகுசு காரைக் கண்டு ஏங்கினார். அதோடு நில்லாமல் கடன் வாங்கி தானும் சொகுசு கார் வாங்கினார். ஆண்டுகள் சில கடந்தன. கடனைச் செலுத்த முடியாமல் தத்தளித்தார். இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ முடியாததால் வந்த வினை தான் இது. பாதையில் கல், முள், மேடு, பள்ளம் எல்லாம் இருக்கும். அதை சீர்திருத்துவதை விட 'திருப்தி' என்னும் காலணியை அணிந்தால் துன்பம் நெருங்காது. தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் நிம்மதியை இழப்பார்கள்.