உள்ளூர் செய்திகள்

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?

கேள்வி

முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?

சத்குரு

அவர் வந்தபோது சூழ்நிலை எவ்வாறாக இருந்தது? அவருக்கு முன்னால் உணர்ந்தவர்கள் எவரும் இல்லையா? அது உண்மை இல்லை. உணர்ந்து இருந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தெரிந்துகொள்வது என்பது ஒன்று, உணர்வது என்பது மற்றொன்று. ஆனால், எவ்வாறு உணர்வது என்பது பற்றி ஒரு ஒழுங்குமுறை வகுப்பது என்பது இது எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டது.நாம் ஆதியோகியை போற்றுவது - அவர் உணர்ந்தவர் என்பதனால் அல்ல; பலரும் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், ஆதியோகியே அவர் சொல்லிக் கொடுத்த செயல்முறை மூலம் அதற்கான வழிமுறையை அனைவருக்கும் சாத்தியம் ஆக்கினார். இது ஒரு ஒருங்கிணைந்த வழிமுறை ஆகும் விதத்தில் அவர் பல பரிமாணங்களில் ஆராய்ந்தார். இது ஒரு சாஸ்திரமாய் உருவானது. சாஸ்திரம் என்றால் தொழில்நுட்பம், ஒரு உள்நிலை அறிவியல். உங்கள் உள்நிலை வளம் பெரும் வகையில் வகுக்கப்பட்ட அறிவியலாய் ஆனது.ஒரு மனிதன் தன் முடிவான இயல்பை அறிவியல் பூர்வமாக அணுகும்முறை - இதுவே அவரின் பங்களிப்பு. அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி, எவரும் இந்த அளவு நுட்பமாகவும் தெளிவாகவும் இதனை விவரிக்கவில்லை. அவரை நாம் கொண்டாடக் காரணமே இதுதான்.இதை உணர்ந்த முதல் மனிதர் இவர்தானா? இல்லாமல் இருக்கலாம். அவர் வந்தபோது மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு கூடினர். உணர்தல் பற்றிய உணர்வு மக்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் குழுமியிருக்க மாட்டார்கள். “நாங்கள் அறியாத ஒன்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்,” என்று சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு கண்டிப்பாய் தெரிதல் இருந்திருக்கிறது.ஆதியோகி தோன்றிய காலத்தை பின்னோக்கிப் பார்த்தால் புரியும். மக்கள் தனித்தனி குழுக்களாக, பல குலத்தவர்களாக பல இன அடையாளங்களோடு வாழ்ந்தனர். ஒருவருடைய எல்லையை மற்றொருவர் தொட்டால், மரணம் நிச்சயம்.யோக மரபில் ஆதியோகி கண்களை மூடிய நிலையில் அமர்ந்திருக்கும் தருணம் தவிர, பிற நேரங்களில் 'எதற்கும் துணிந்தவர்' ஆகவே அறியப்படுகிறார். வெளிப்படையாக அங்கு வன்முறைகள் நிகழ்ந்து இருந்தது; அவர் அந்த சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து இருந்தார். அவர் எந்த அளவு யோகத்தில் அசைவின்றி அமரும் யோகியோ அதே அளவு போர் புரியும் ஒரு மனிதராகவும் இருந்தார். அவர் ஆயுதத்தை சுமந்து இருந்ததாய் அறியப்படுகிறார். இதுவே அன்றைய சூழ்நிலையில் இருந்த சமூகத்தைப் பற்றி விவரிக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் போர் புரியத் தெரியாத ஒரு மனிதன் மனிதனாகவே கருதப்படவில்லை.உண்மையான சூழ்நிலையைப் பற்றி சிறிதளவே நாம் அறிந்திருக்கிறோம்; ஆனால் மனித மனம் எத்தகையதென்று நாம் அறிவோம். மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று நாம் அனுமானிக்க முடியும். ஒருவேளை வனாந்திரத்தில் உணவை தேடி நீங்கள் அலைந்தால், கண்டெடுக்கப்படும் உணவு உங்களுடையது ஆகிவிடும்.நீங்கள், உங்கள் குடும்பம் உங்கள் குழு என அனைவரும் அந்த உணவை உண்பீர்கள். உயிர்வாழ்வதற்கான உணர்வு மேலோங்கி இருந்திருக்கும். அது மேலோங்கி இருந்தாலும் கலாச்சாரத்தில் எங்கோ ஒரு மூலையில் விரிவடைவதற்கான ஒரு ஏக்கத்தை மக்கள் மனதில் புகுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில் அறிந்து கொள்வதற்கான தேடல் அவர்களிடம் தோன்றியிருக்காது.முழுமை அடைவதற்கான இந்த தேடல் உலகின் மற்ற பாகங்களில் வெளிப்படவில்லை; ஆனால், இங்கே வெளிப்பட்டது. இது ஒரு திடமான சமூகமாய் இருந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதனாலேயே காலம் கடக்க கடக்க மக்கள் பண்பட்டனர். உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு நம்மை முழுமை அடையச் செய்யவில்லை; வேறு பல பரிமாணங்களை நம்முள் நாம் பலப்படுத்த வேண்டும் என்று உணர்ந்தனர்.எந்த அளவில் என்று நாம் அறிந்து இருக்கவில்லை; ஆனால், அத்தகைய ஒரு உணர்தல் அவர்களுக்கு வந்திருக்கும். மக்கள் ஆதியோகியை பயத்தோடு அணுகவில்லை. அவரிடம், தங்களுக்கு கொடுக்கக் கூடிய ஏதோவொன்று உள்ளது என்பதை உணர்ந்து, அந்த உணர்தலில் அவரை அணுகினர். ஏதோ ஒருவிதத்தில் அவர்கள் உயர்நிலையை அடைவதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டிருந்தனர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.