குருபெயர்ச்சி பலன்கள்
குருபெயர்ச்சி பலன்கள் கும்பம்
கும்பம்கும்பம்: அவிட்டம் 3,4: செயலில் கவனம்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறேவேறும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலை மாறும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்னைகளும், சிலருக்கு உடல்நிலையில் பின்னடைவும் ஏற்படும். தவறானவர்களின் பிடியில் சிக்கி பண இழப்பு அவமானம் என்பதை சந்திக்க வேண்டிவரும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சிலருக்கு ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம், தொழிலில் போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். சிலர் சட்ட சிக்கல்களையும் வம்பு வழக்குகளையும் சந்திக்க வேண்டிவரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, பிரச்னை என ஏற்படும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு நெருக்கடி, போராட்டம், பிரச்னை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார். செல்வாக்கோடு உங்களை நடைபோட வைப்பார். உடல்நிலை சீராவதுடன் நீண்டநாள் கனவுகளும் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு சங்கடங்கள் வரும் போதெல்லாம் அரணாக நின்று உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் கிடைக்கும் இடங்கள் சுபிட்சமடையும்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் உங்கள் ராசியையும் லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், வியாபாரம தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். தைரியமாக செயல்பட முடியும். திருமணம், குழந்தை பாக்யம், வேலை என்ற எண்ணங்கள் ஈடேறும்.அக். 20 முதல், 12, 2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் செலவுகளும் வெட்டி அலைச்சலும் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் 10,12,2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவடையும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.எடுத்த வேலைகள் வெற்றியாகும். சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான சனியும், பாக்ய குருவும், 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் குருவும் நன்மைகளை வழங்குவர். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.தொழில் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களுக்கு, செய்யும் தொழிலில் அக்கறை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தமும் பணியாளர் ஆதரவும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும்.பெண்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வெளியூரில் தங்கி வேலைப் பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் தேவைகள் பூர்த்தியாகும்.கல்விஉயர்வான வாழ்க்கையையும் அதிகாரமிக்க பதவியையும் விரும்பும் உங்களுக்கு, படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறீர்கள்.குடும்பம்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் யோக நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.சதயம்: கவனம் தேவையோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், கர்மக்காரகனான சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. எடுத்த வேலைகளை மட்டும் அல்லாமல் பிறரால் செய்ய முடியாத வேலைகளையும் செய்து வெற்றிபெறக்கூடியவர்கள் நீங்கள் என்பதால் உங்களுக்கென்று எப்போதும் தனி செல்வாக்கு இருக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கி செல்வாக்கோடு நடைபோடவைத்த குரு,மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்தில் சஞ்சரித்து, அதிசாரமாக அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இதன் காரணமாக, மே. 26 முதல் 6 ம் இட குரு எடுக்கும் வேலைகளில் இழுபறியான நிலையினையும், எதிரிகளால் தொல்லைகளையும், வம்பு வழக்குகளையும், ஆரோக்கியத்தில் சங்கடத்தையும், பண வரவில் தடைகளையும், வியாபாரத்தில் மந்தமான நிலையினையும், குடும்பத்தில் குழப்பத்தையும், கணவன் மனைவிக்குள் பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்னை என்று ஒன்று விட்டு ஒன்று வந்து கொண்டிருக்கும். தொழிலும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பது பொதுவான விதி. அக். 20 முதல் இந்த நிலை மாறும். மந்திரம் போட்டதுபோல் உங்கள் வாழ்க்கை வளமாகும்.செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். திருமண வயதினர் மணமேடை ஏறுவர். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும்.உங்கள் ராசியாதிபதி சனிக்கு, குரு நட்பானவர் என்பதுடன் தாரா பலன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு ஸாதக தாரையான புனர்பூசத்திலும், ஷேம தாரையான ஆயில்யத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் குரு அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மே 26 ல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 10,12, 2 ம் இடங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். வீண்செலவுகள் குறையும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால், உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். சேமிப்பு உயரும். உடல், மனம் உற்சாகம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். பழைய முதலீடுகளில் இருந்து வட்டியுடன் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாலினரின் நட்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன் மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவும், அவரின் பார்வைகளும் ,உங்கள் வாழ்வை வளமாக்கும், எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். நவம்பர் 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களை செல்வாக்குடன் நடைபோட வைப்பார்.தொழில்இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு மே 26 முதல் குருப்பார்வை கிடைப்பதுடன், சனி பகவானின் 10 ம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால், செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள் தொழில்காரகன் சனி பகவான் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலையின் மீதிருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகையும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைக்காக கடல் கடந்து செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்னை, உடல் நிலையிலும் பாதிப்பு என்றிருந்த நிலைகள் மாறும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும். படிப்பு, வேலை, திருமணம் என்ற அவரவரின் கனவுகள் நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி குருப் பார்வையால் படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மேற் கல்விக்காக சிலர் வெளி மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் செல்வீர்கள்.உடல்நிலைகுருப்பார்வையும், நவ. 13 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும்.குடும்பம் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1,2,3: வழக்கில் வெற்றி––––––ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், இதுவரை அடைந்துவந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். சுபிட்சம் மறையும். சோதனைகள் அதிகரிக்கும். உடலில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன்தொல்லை வேதனைதரும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும் என்பது ஆறாமிட குரு வழங்கும் பொதுப்பலனாகும். அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலையாவும் மாறும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் கூடும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு,மே 26 முதல், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, நினைத்ததை சாதிக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பட்டம், பதவி, பொறுப்பு என்ற கனவை நனவாக்குவார். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபிட்சமான நிலையினை உண்டாக்குவார். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியத்தை வழங்குவார். சொந்த வீடு, குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்ப்பார். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நிலையை மாற்றுவார். எந்த ஒன்றிலும் இழுபறியான நிலை ஏற்படும். உடல்நிலையிலும் ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு உங்கள் செயல்பாட்டை தடுக்கும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என உங்கள் நிம்மதியைக் கெடுக்கும். பணவரவிலும் தடை ஏற்படும், வியாபாரம் தொழிலிலும் நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்திலும் சங்கடங்கள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும்.இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால், உங்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவாரே ஒழிய கடுமையாக சோதிக்க மாட்டார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸம்பத், மற்றும் ஷேம தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் படும் இடங்கள் சுபிட்சமடையும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், 10,12,2 ம் இடங்களை குரு பார்ப்பதால், வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பாத சனியின் பாதிப்பு நீங்கும்.அக். 20 முதல், உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மற்றவர்கள் மதிக்கும் வகையில் உங்கள் நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், ஜென்ம சனியின் பாதிப்புவிலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கட விலகும். எதிர்பார்த்த புகழும் பெருமையும் கிடைக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த வேலைகளிலும் இப்போது ஆதாயம் உண்டாகும். அரசாங்க உதவியும் ஆதரவும் கிடைக்கும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எண்ணம் நிறைவேறும்.அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம், வசதி வாய்ப்பு கூடும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருப்பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளும், நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும் அவருடைய பார்வைகளும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் அரண்போல் இருந்து பாதுகாப்பர்.நன்மைகளை வழங்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். சுபிட்சத்தை ஏற்படுத்துவர். பொன் பொருள் புகழுக்கு வழிகாட்டுவர். வழக்கில் வெற்றியை உண்டாக்குவர்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிய தொழில் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜூவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நெருக்கடி நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.பெண்கள்குரு பகவானின் பார்வைகளும் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதுடன், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும், பொன் பொருளும் சேரும்.கல்விஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு, படிப்பின் மீது அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும், மங்களக்காரகன் குருவின் பார்வைகளும் சஞ்சாரமும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும் ஆபத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடை போடுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம் ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.