உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / குருபெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்கள் மிதுனம்

மிதுனம்மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நல்லதே நடக்கும்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். எடுத்த முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும். குறிக்கோளை எட்ட முடியும்.மிருகசீரிடம் 1,2ம்  பாதத்தினருக்கு மே 26 முதல் 3 ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 4 ம் வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால், செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணியாளர்களுக்கு பார்த்துவரும் வேலை நிலைக்குமா என்ற பயம் உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத தடை ஏற்படும். எடுத்த வேலையை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராகும். மனதில் இனம்புரியாத பயமும், உங்களுக்கு கீழானவர்களால் சிலர் அவமானத்தையும் சந்திக்க நேரும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்பதால் அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமிது. 3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் இடமான சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், உங்கள் நிலையை உயர்த்துவார், செல்வம், செல்வாக்கு அந்தஸ்தோடு வாழ வைப்பார். எடுக்கும் வேலைகளில் வேகம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். எதிலும் வெற்றி என்ற நிலையுடன் எதிர்பாராத பண வரவும் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அனைத்திலும் நிதானம் தேவை. இவையெல்லாம்  பொதுப்பலன்கள் என்றாலும் உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் உங்கள் நிலையில் குரு முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். தாரா பலன் அடிப்படையில் ஷேம தாரையான பூசத்திலும், சாதகத் தாரையான மகத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனால், அவருடைய பார்வைகள்படும் இடங்கள் எல்லாம் யோகத்தை உண்டாக்கும். 1,2ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 7,9,11 ம் இடங்களையும், அக். 20 முதல் 8,10,12 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். புதிய இடம், வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் லாபம்தரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரயச்செலவுகள், அலைச்சல் குறையும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11ம் இடங்களையும் குரு பார்ப்பதால், வம்பு, வழக்கு, நோய் நொடி என்றிருந்த நிலைகள் மாறும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு திருமணம், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் ஆதாயம், புதிய சொத்து, வியாபாரம் தொழிலில் முன்னேற்றம். பணப்புழக்கம் என்று வாழ்க்கை வளமாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.தொழில் தொழில் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை ஆபரணம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், பங்கு வர்த்தகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். ஆட்குறைப்பின் காரணமாக வேலைப் போய்விடுமோ என்ற பயம் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த நிலை மாறும். கணவரின் ஆதரவு உங்களை மதிப்போடு வாழ வைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம் என அவரவர் கனவு நனவாகும். உடல்நிலை சீரடையும்.கல்வி படிப்பில் ஆர்வம் கூடும். உங்கள் திறமையைக் கண்டு பெற்றோர்கள் நீங்கள் விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்ப்பார்கள். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.உடல்நிலைஉடல்நிலையில் தோன்றிய சங்கடங்கடங்கள் விலகும். விபத்து, கடுமையான பாதிப்பு என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் நலமடைந்து வீடு திரும்புவீர்கள். உடல்நிலையின் காரணமாக உங்களுக்கேற்பட்ட பயம் போகும்.குடும்பம்குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும் சொந்த வீடு வாகனம் என்ற கனவு நலவா குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும் வசதி வாய்ப்புகள அதிகரிக்கும்.பரிகாரம்அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில்  இருந்த சங்கடம் நீங்கும்.திருவாதிரை: யோக காலம்வித்யாகாரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் ஒன்றை நூறாக்கிடக் கூடியவர்கள். எண்ணியதை அடைந்திடும் ஆற்றல்மிக்கவர்கள். சூழ்நிலைகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, குரு  பகவானே ஜீவனாதிபதியாவார். தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாவார். மே 26 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, அதிசாரமாக அக். 20 முதல் உங்கள் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக மே. 26 முதல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நடக்கவே நடக்காது என்று கை விட்ட வேலைகளும் முடிவடையும். உங்களிடம் புதிய வேகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். உறவினர்களுடன் சுமூகமான நிலை உருவாகும். சம்பத் தாரையான புனர்பூசம் நட்சத்திரத்திலும், ஷேம தாரையான ஆயில்யம் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் மேலும் நன்மைகள் கூடும். மேன்மையான நிலை உண்டாகும். அக். 20 முதல் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். சாதாரணமாக நடந்துவந்த வேலைகளையும் கடுமையான முயற்சிகளால் முடிக்க வேண்டியதாக இருக்கும். மனம் குழப்பமடையும். அலைச்சல் அதிகரிக்கும் என்பது பொதுப்பலனாகும். இந்த சமயத்தில் உங்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், யோகமான திசா புத்தி நடந்தால் சங்கடங்கள் எதுவும் உங்களை நெருங்காமல் போகும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 ல் கடகத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு, 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், நோய் நொடி எதிர்ப்பு பகை வம்பு, வழக்கு என்றிருந்த நிலையெல்லாம் மாறும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த பயம் போகும். வியாபாரம் மற்றும் தொழில் லாபமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால், நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். பெரியோரின் ஆதரவும் தெய்வ பலமும் கூடும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சகாய கேதுவும், 120 நாட்கள் உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியனும் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். பட்டம், பதவி, பெருமை என்ற ஆசையை நிறைவேற்றுவர்.தொழில் தன குடும்ப வாக்கு ஸ்தான குருவும், சகாய குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வாடகைக்கும் லீசுக்கும் இடம் எடுத்து தொழில் செய்துவந்த சிலருக்கு அந்த இடத்தையே வாங்கும் நிலை உண்டாகும். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பிரிக்ஸ், பில்டர்ஸ், நிதிநிறுவனம், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஆன்லைன் வர்த்தகம், மருத்துவம், ஐ.டி, ஷேர் மார்க்கெட், வாகன விற்பனை, தொழிற்சாலை, டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜென்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம், ஏஐ தொழில், மற்றும் வேளாண்மை வளர்ச்சி அடையும் மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.கலைஞர்கள் நிலை உயரும்.பணியாளர்கள் அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாகப் பணியாற்றி வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்தில் வேலையில் சேருவீர்கள். சம்பள உயர்வுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்எந்த ஒன்றிலும் முன்னேற்றம் இல்லை, எந்தப்பக்கம் போனாலும் பிரச்சனை ஏற்றிருந்த நிலையெல்லாம் மாறும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். பொன் பொருள் சேரும். உறவுகளுடன் இணக்கம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் கூடும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.கல்வி இயல்பாகவே படிப்பில் வல்லவரான உங்களுக்கு, இக்காலத்தில் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் இருந்த இடம் தெரியாமல் போகும். தொற்றுநோய், பரம்பரை நோய், பருவநோய் என்று அவதிப்பட்டு வந்தவர்களுக்கு உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச. செலவுகள் குறையும்.குடும்பம்என்னதான் முன்னேற்றம் இருந்தாலும், கையில் பணம் புழங்கினாலும், குடும்பத்தில் நிம்மதி இல்லையே என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு வாகனம் பொன் பொருள் சேரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவீர்கள்.பரிகாரம் திருவாலங்காடு காளியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும். நினைத்தது நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: நினைப்பது நடந்தேறும்ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். சாதுரியமாக செயல்பட்டு சாதித்திடக்கூடிய நீங்கள் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் உங்கள் வாழ்க்கை வளமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். சோர்ந்து கிடந்தவர்களும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். வராமல் இருந்த பணம்வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். அக். 20 முதல், செய்துவரும் தொழிலில் சின்னச்சின்ன நெருக்கடிகள், தடைகள் ஏற்படும், வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும், எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் போகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்பது பொதுவிதியாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜென்ம குருவாகவும், அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால் மே 26 முதல்,  பார்த்துவரும் வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். நன்றாகப் பழகி வந்தவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். தொழிலிலும் சிலருக்கு பிரச்சனைகள் உண்டாகும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போகும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். இழந்த பொருளெல்லாம் கைக்கு வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஸம்பத்து தாரையான பூசம் மற்றும் ஷேமத் தாரையான மகத்தில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் கூடும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் சஞ்சரிக்கும் இடங்களைவிட பார்க்கும் இடங்களை சுபிட்சமாக்கிடக்கூடியவர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10 ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுத்த வேலைகள் ஜெயமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். புதிய இடம், வீடு வாங்க முடியும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயம் கூடும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 5,7,9 ம் இடங்களையும், அக். 20 முதல் 6,8,10 ம் இடங்களையும் குரு பாரப்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம், வசதி வாய்ப்பு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலைகள் முடியும். அனைத்திற்கும் சூழ்நிலை சாதகமாகும். சொந்த தொழில், சிலருக்கு தகுதியான வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் கூடும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.தொழில் தொழில் ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வைகள் கிடைப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கவனமாக செயல்பட்டு லாபம் காணக்கூடிய நிலை உருவாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ, அலைபேசி சம்பந்தப்பட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், அழகு சாதனப் பொருட்கள், கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வெளிநாட்டு மோகம் குறையும். வெளிநாட்டில் வேலைப் பார்த்துவரும் சிலர் சொந்த ஊர் நோக்கி வரக்கூடிய நிலை உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கூடும்.பெண்கள் மனரீதியாக சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எந்த ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லை என்றக் குறை விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ற தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.கல்வி வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உங்களைப்பற்றி பல்வேறு முடிவுகளுக்கு வந்தாலும், படிப்பில் அக்கறை கொண்டவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள். எதிர்காலம் என்பது படிப்பினால்தான் என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல் நிலையில் இருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய் என்று அவ்வப்போது சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய நிலை உருவாகும். மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்த நிலை மாறும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்துவரை சென்றவர்களும் பெரியோரின் அறிவுரைகளால் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக் கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம்நெல்லையப்பரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் கூடும்....................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !