உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் கன்னி

கன்னிகன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திராதிபதி சூரியனால் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றம் அடையும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் திடீர் வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் விலகும் பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 8.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28. ஜூலை 1, 5, 10, 14.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.அஸ்தம்தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிநாதன் புதன் ஜூலை 9 முதல் உங்கள் கனவுகளை நனவாக்குவார். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். லாப குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனியால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் தன குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடும். குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜூலை 9.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 5, 11, 14.பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பதவியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தினப்பணியாளர்களாக வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு வரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். உங்கள் சப்தமாதிபதி குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் 3, 5, 7 ம் இடங்களையும் பார்ப்பதால், வருமானம் அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகள் எல்லாம் இழுபறியாக இருந்த நிலைமாறும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல் வாதிகளுக்கு அதிகாரமுள்ள பதவி கிடைக்கும். சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாக சஞ்சரித்து வரும் சனியால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் விலகும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நோய் நொடிகளில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும், எதிர்வரும் பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலைமாறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 10.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !