உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / மாத ராசி பலன்

மாத ராசி பலன் மகரம்

மகரம்மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்முன்னேற்றம் ஒன்றையே லட்சியமாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய மாதம். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு எடுத்த வேலைகளில் வெற்றி அடைவீர். உங்கள் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பிறரை சிந்திக்க வைக்கும் அளவில் உங்கள் செயல்பாடு இருக்கும். புகழ் அந்தஸ்து கௌரவம் உயரும். அரசியல்வாதிகள் சிலருக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அனைத்திலும் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். வியாபாரம் தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நேற்றைய கனவு நனவாகும். ஆடை ஆபரணம் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மாணவர்களுக்கு படிப்பின்மீது அக்கறை கூடும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற லாபம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: மே 23.அதிர்ஷ்ட நாள்: மே 17, 19, 26, 28. ஜூன் 1, 8, 10.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடம் விலகி நன்மை நடக்கும்.திருவோணம்: ஒரு முடிவினை எடுத்து அதை நோக்கி மட்டும் நடைபோடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம்.ராசிநாதன் சனிபகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வந்த உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். வருமானம் உயரும். கடன் தொல்லை விலகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நெருக்கடி முடியும். செய்து வரும் தொழில் லாபம் தரும். மனக்குழப்பம் விலகும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்று கவலை மாறும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலை விரிவு செய்வதற்காக எடுக்கும் முயற்சி வெற்றி தரும். உங்கள் சுக ஸ்தானதிபதி செவ்வாய், சுக ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உழைப்பாளர் நிலை உயரும். உழைப்பை முதலீடாக வைத்து நடைபெறும் வேலை லாபம் தரும். மே 27 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பங்குச் சந்தையில் எதிர்பார்த்த லாபம் வரும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த லோன் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாதத்தின் முற்பகுதியில் குரு பார்வை கிடைப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். சிலர் அடமானம் வைத்திருந்த சொத்துகளை மீட்டெடுப்பீர். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் நிலையில் ஏதேனும் சங்கடங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பார். உடல் நிலையிலும் அவ்வப்போது ஏதேனும் பிரச்னை தலைக்காட்டும். கவனமாக இருப்பது நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணநாள் முடிவாகும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: மே 24.அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 2, 8, 11.பரிகாரம் உச்சிப்பிள்ளையாரை வழிபட அஷ்டம கேதுவின் பாதிப்பு விலகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: எடுக்கும் வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் சுக ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். பாதியில் நின்ற கட்டுமான வேலைகளில் வளர்ச்சி ஏற்படும். கடினமாக உழைத்திடக்கூடிய உங்களுக்கு இந்த மாதத்தில் அதற்குரிய பலன் கிடைக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு ஏற்படும். இதுவரை சந்தித்து வந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், நீண்ட நாள் கனவு  நனவாகும். பாதியில் நின்ற வேலை முடியும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் செல்வாக்கு உயரும்.  திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு திருமணம் கூடும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பெரியோரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மே 25.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !